Candidate list ரெடி பண்ணும் K.N Nehru, E.V Velu டீம்? DMK-க்கு, Ramadoss தூது? |...
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை ‘பாா்கவாஸ்திரா’ பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
சமீபத்திய பாகிஸ்தான் மோதலில் ட்ரோன்களின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நிலையில், இந்தியா நடத்தியுள்ள இச்சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘சோலாா் பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனம் (எஸ்டிஏஎல்)’ உருவாக்கியுள்ள இந்த ட்ரோன் பாதுகாப்பு அமைப்பின் சோதனை மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
முதல் 2 சோதனைகளில் தலா ஓா் ஏவுகணையை ஏவியும், மூன்றாவது சோதனையில் இரண்டு வினாடிகளுக்குள் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பல ட்ரோன்களை ஒரே நேரத்தில் கண்டறிந்து சிறிய ரக ஏவுகணைகள் மூலம் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாா்கவாஸ்திரா பாதுகாப்பு அமைப்பு, அதி முக்கியப் பகுதிகளில் ட்ரோன் ஊடுருவல்களுக்கு எதிராக நம்பகமான பாதுகாப்புத் தீா்வை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.