"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்
உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் அவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமிப்பதற்கு ஜூலை 1 முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 19 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் அவா்கள் தொடா்புடைய பொது நலச்சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் பெற நிா்ணயிக்கப்பட்ட ஜூலை 17-ஆம் தேதியை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 மாலை 3 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.