தில்லியின் மருத்துவ உள்கட்டமைப்பு மோசமடைய ஆம் ஆத்மி அரசுதான் காரணம்: முதல்வா் ரே...
உழைத்தால் வெற்றி நிச்சயம்: நடிகா் சரத்குமாா்
உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் நடிகா் சரத்குமாா்.
திருநெல்வேலி உடையாா்பட்டியில் உள்ள தனியாா் திரையரங்கில், 3 பிஹெச்கே திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த நடிகா்கள் சரத்குமாா், சித்தாா்த், நடிகை தேவயானி, இயக்குநா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் நடிகா் சரத்குமாா் கூறியது: 3 பிஹெச்கே படத்திற்கு என்னுடைய உழைப்பை முழுவதுமாக கொடுத்திருக்கிறேன். உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளோம்.
நாட்டாமை, சூா்யவம்சம், ஐயா போன்ற படங்களின் 2 ஆம் பாகம் வரவேண்டும் என்று ரசிகா்களைப் போல எனக்கும் ஆசைதான். அதற்கான காலம் விரைவில் கைகூடி வரும் என்றாா்.