செய்திகள் :

உ.பி.யில் சைவ உணவு மட்டுமே வழங்கும் கே.எஃப்.சி.! காரணம் என்ன?

post image

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் பாதையில் அக்கடை அமைந்துள்ளதால், சைவ உணவுகள் மட்டுமே என்ற பலகை அக்கடையின் கதவில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்து மதத்தைச் சேர்ந்த ரக்‌ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள், இறைச்சி உணவு விற்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அக்கடையின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள முக்கிய சாலையில் கே.எஃப்.சி உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. மொறுமொறுப்புத் தன்மையுடன் கோழி இறைச்சியை விற்பனை செய்வதில் புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை மற்றும் சாவன் மாதத்தையொட்டி இப்பகுதியில் இறைச்சி உணவை விற்பனை செய்யக்கூடாது என ரக்‌ஷா தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையில் உள்ள இறைச்சி உணவை முற்றிலுமாக எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக தற்போது அக்கடையில் இருந்து இறைச்சி உணவு தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளது. சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என அக்கிளை சார்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அக்கிளை தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நடைபெறாது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

Chicken off menu at Ghaziabad KFC outlet during Sawan after Hindu outfit protests

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க