செய்திகள் :

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; மூத்த தெலுங்கு நடிகருக்கு தொடரும் சிக்கல் - கொலை வழக்கு பதிந்த போலீஸ்!

post image

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு. இவருக்கும், இவரின் மகன் மனோஜ் மஞ்சு - மருமகள் மோனிகாவுக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக பிரச்னை நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் மஞ்சு மோகன், தன் மகன் மீது கவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான தகவல்களை சேகரிக்க, ஊடகவியலாளர்கள் சிலர், ஹைதராபாத் புறநகரில் உள்ள ஜல்பல்லியில் நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு ஊடகவியலாளர்களிடம் அநாகரிக முறையில் நடந்துகொண்ட நடிகர் மஞ்சு மோகன், மைக்கைப் பிடிங்கி ஊடகவியலாளர்களரின் முகத்தில் வீசியிருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த ஊடகவியலாளர் ரஞ்சித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கைப் பதிவு செய்த காவல்துறை, ஊடகவியலாளர் ரஞ்சித் குமாரிடம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், ஊடகவியலாளர் ரஞ்சித் குமாருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அதைத் தொடர்ந்து, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், பி.என்.எஸ் பிரிவு 118 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தாமாக முன்வந்து காயம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) படி FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Game Changer: படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களின் பட்ஜெட் 75 கோடி! - `ஷாக்'கான ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இத்திரைப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50-வது படம். பிரமாண்டமாக ... மேலும் பார்க்க

Game Changer: `` இந்திய அரசியலின் உண்மையான கேம் சேஞ்சர் பவன் கல்யாண்தான்!'' - ராம் சரண் ஷேரிங்ஸ்

ஷங்கரின் `கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்வு ராஜமுந்திரியில் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். துணை முதல்வராக பதவியேற்றப் பிறகு அ... மேலும் பார்க்க

Game Changer: "இது சங்கராந்தி அல்ல; ராம் சரணின் 'ராம் நவமி'" - இயக்குநர் ஷங்கர் புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெள... மேலும் பார்க்க

Game Changer: "ஷங்கர் தமிழ் இயக்குநர் அல்ல, தெலுங்கு இயக்குநர்; ஏன்னா..." - ராஜமெளலி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வானி அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் ஜேஞ்சர்'.அரசியல் திரில்லர் திரைப்படமான இது வரும் ஜனவரி 10ம் தேதி த... மேலும் பார்க்க

``சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றவர்கள் பொறுப்பற்று செயல்படவில்லை" - அல்லு அர்ஜுனை சாடும் தயாரிப்பாளர்

தெலுங்கு சினிமாவை உலகளவில் பிரபலப் படுத்திய நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவருடைய புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் மரணித்த விவகாரமும் அதைத் ... மேலும் பார்க்க

நடிகைக்கு பாலியல் தொல்லை: `புகைப்படத்தைக் காண்பித்து மிரட்டுகிறார்’ - கன்னட சின்னத்திரை நடிகர் கைது

கன்னட தொடரான முத்துலட்சுமி தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமாகி பிஸியாக நடித்து வருபவர் நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையில் புகார் அளித்த... மேலும் பார்க்க