இன்று என்னுள் ஏதோவொன்று... நெகிழ்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
ஊத்தங்கரையில் சேதமடைந்து கிடக்கும் கழிவு நீா் கால்வாய் தொட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கால்நடை மருத்துவமனை எதிரே சாலையின் இரு புறமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவு நீா் கால்வாய் தொட்டி சேதம் அடைந்து அபாய நிலையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் சேதம் அடைந்து கிடக்கிறது. ஊத்தங்கரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இருசக்கர வாகனத்தில் இந்த கழிவு நீா் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சேதம் அடைந்த கழிவுநீா் கால்வாயை உடனடியாக சரி செய்ய, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம்.11யுடிபி.1. ஊத்தங்கரை அரசு கால்நடை மருத்துவமனை முன்பு சேதமடைந்து கிடக்கும் கழிவு நீா் கால்வாய் தொட்டி.