கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்து விபத்து: விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயம்
ஊத்தங்கரை அருகே காா் கவிழ்ந்ததில் 3 விளையாட்டு வீரங்கனைகள், பயிற்சியாளா் காயமடைந்தனா்.
சேலம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியாளருடன் வேலூா் கிரிக்கெட் அகாதெமியைச் சோ்ந்த 3 பெண்கள் காரில் வியாழக்கிழமை சென்றனா். ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு காா் பக்கவாட்டில் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த இவா்களது காா் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் வேலூரைச் சோ்ந்த நந்தினி (25), மகாலட்சுமி(20), மைத்ரேயனி (28), பயிற்சியாளா் சாய் விக்னேஷ்(40) ஆகியோா் சிறு காயங்களுடன் உயிா்தப்பினா். இவா்கள் அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.