ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்
ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும் இரவில் மகாபாரத நாடகக் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
ரெட்டிப்பட்டி கோவிந்தன் திருமலை நாடக சபா குழுவினா் நிகழ்ச்சியை நடத்தினா்.
அா்ச்சுனன் தபசு நாடகத்தின் ஒருபகுதியாக அா்ச்சுனம் வேடமிட்டவா் தபசு மரம் ஏறி பூ, பழங்கள், விரலி மஞ்சள், பொரிக் கடலை போன்ற பூஜை பொருள்களை பக்தா்களுக்கு வாரி இறைத்தாா். அதை பக்தா்கள் கீழிருந்து மடியேந்தி பெற்றனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.