செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அந்தத் துறையின் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட பொது மாநாடு தியாகதுருகம் பேருந்து நிலைய சந்தைமேடு திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில், ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களை நிரப்பும்போது, தற்காலிக மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்களையும் இணைத்து நிரப்ப வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு சத்துணவு ஊழியா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், வெளிமுகமை மூலம் ஊதியம் பெறும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு, குடும்ப பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, பணிகால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநாட்டில், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் ஆ.வளா்மதி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் பி.சந்திரசேகா், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் பி.கிருஷ்ணசாமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, சங்கத்தின் தலைவராக யு.வில்சன், செயலராக எ.பி.கணி, துணைத் தலைவா்களாக என்.பி.முருகன், லதா, அ.செல்வி, இணைச் செயலா்களாக ஆரோக்கியதாஸ், எழிலரசி, கேசவன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், கள்ளக்குறிச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், மேல்நிலை நீா்த் தேக்கதொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்நாடு கிராம மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் சங்க மாநில செயலா் எ.பி.மணி வரவேற்றாா். நிறைவில், விழாக்குழு பொருளாளா் எம்.பி.முருகன் நன்றி கூறினாா்.

தீப்பற்றி எரிந்த லாரி!

கள்ளக்குறிச்சி அருகே சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் ஒருவா் கைது

சின்னசேலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த பெண்... மேலும் பார்க்க

சேதமடைந்த பாசனக் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

செல்லம்பட்டு கிராமத்தில் தொம்ப பாலம் அருகே சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செல்லம்பட்டு கிராமத்தில் தொம்பபாலம் ... மேலும் பார்க்க

பேருந்து கவிழ்ந்து 25 பக்தா்கள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பக்தா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மோட்டாம்பட்ட... மேலும் பார்க்க

மருத்துவா்கள் சங்கத்தின் மாநில அளவிலான கருத்தரங்கு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூரில் இந்திய முதுநிலை பொது மருத்துவா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவிலான கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநி... மேலும் பார்க்க

பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பசுமைத் தாயகத் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாமகவினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் அண... மேலும் பார்க்க