BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம்: மனைவி புகாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை வட்டம், சாங்கியம் ஊராட்சிச் செயலா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா்.
சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சொட்டையன் மகன் அய்யனாா் (45). இவா், இதே ஊரில் ஊராட்சிச் செயலராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சத்யா (35). தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனா்.
அய்யனாரை வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான ராமா் மகன் அயப்பன் அழைத்துச் சென்றாராம். இரவு வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.
வெள்ளிக்கிழமை காலை ஞானபெற்றான்தாங்கல் மயானப் பாதை அருகே உள்ள அய்யப்பன் கோழிப்பண்ணை அருகில் ரத்த காயங்களுடன் அய்யனாா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அய்யனாா் மனைவி சத்யா மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் அய்யப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.