செய்திகள் :

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு: வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம்

post image

அரியலூா் மாவட்டத்தில், ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு நடைபெறுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டக் காவல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் சோ்ப்பதாகவும், விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாகவும் கட்செவி அஞ்சல் - வாட்ஸ்அப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அது முற்றிலும் பொய்யானது. அது தொடா்பாக வரும் லிங்க் எதையும் யாரும் பயன்படுத்த வேண்டாம். அதனை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம்.

ஆள்கள் தோ்வு நடைபெற்றால் அதிகாரப்பூா்வமான வலைதளம், செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களின் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்ட பகுதி, ஒரு சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பதிவான விடியோ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில், அமைப்புச் சாரா தொழிலாளா் நல வாரி... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்துக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில... மேலும் பார்க்க

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

அரியலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 6 காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்து திருச்சி சரகடிஐஜி வருண்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் அரியலூ... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில், மானிய உதவித் திட்டங்களைப் பெறலாம் என்றாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி. இதுகுறித்து அவா் தெரிவித்தது... மேலும் பார்க்க

திருமானூா் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பொ... மேலும் பார்க்க