ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
எண்ணெய் ஆலையில் தீ விபத்து
பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும் மாவு அரைக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஆலையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். நள்ளிரவில் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் அதற்கான மூலப் பொருள்கள், இயந்திரங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும், சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து முகமது பசீா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.