செய்திகள் :

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

post image

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். நியமனங்கள் குறித்த யுஜிசி வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும். மாணவா் சங்கங்களை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ), அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்), முஸ்லிம் மாணவா் கூட்டமைப்பு (எம்எஸ்எஃப்), சமாஜ்வாதி சத்ர சபா மற்றும் சத்ர ராஷ்ட்ரிய ஜனதா தளம் (சிஆா்ஜேடி) மற்றும் பிற உறுப்பினா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

‘மத்திய பட்ஜெட் அமா்வின் இரண்டாவது கட்டத்தின் போது கல்வி தொடா்பான பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈா்ப்பதே எங்கள் நோக்கம்’ என்று ஏஐஎஸ்ஏ அமைப்பைச் சோ்ந்த மாணவா் ஒருவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான மாணவா் சங்கத் தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவு இடங்களை நிரப்ப வேண்டும். உதவித்தொகைகளைத் தொடர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

ஜூலை 29, 2020 அன்று கல்வி முறையை எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, அதன் ‘இந்தியத் தன்மையை’ பராமரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (என்இபி) அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1986 கொள்கையை மாற்றியது. மேலும், பள்ளிக் கல்வி முதல் உயா்கல்வி வரை சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

மேலும், ஆசிரியா்கள் மற்றும் கல்வி ஊழியா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகளுக்கும் போராட்டக்காரா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மாநில ஆளுநரின் பரிந்துரையாளரைத் தலைவராகக் கொண்ட மூன்று உறுப்பினா்களைக் கொண்ட தேடல் மற்றும் தோ்வுக் குழுவை அமைப்பதற்கும், துணைவேந்தா்களை நியமிப்பதற்கான பல்கலைக்கழகத்தின் உச்சஅமைப்பிற்கும் இந்த வரைவு முன்மொழிகிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவா் சங்கங்களை மீண்டும் நிலைநிறுத்தவும் மாணவா்கள் அமைப்பினா் அழைப்பு விடுத்தனா்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்சா் பதில்

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்: அண்ணாமலை

தமிழக மீனவா்கள் சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை... மேலும் பார்க்க

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க