செய்திகள் :

``என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் கட் ஆகுது!'' - பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழிசை

post image

இந்திய தொழிலதிபர் அதானி, சூரிய சக்தி மின்சாரத்தை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு வெளியானதும், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இதுதொடர்பாக பேசியதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஸ்டாலின் , அதானி

இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதானியை முதலமைச்சர் சந்திக்கவேயில்லை என்றும், பொய் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ``அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நானும் அவரைப் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாரும் அதானியைச் சந்திக்கவில்லையா என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். முன்னதாக, பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை பாரதியார் சிலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், அதானி குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, `` `நான் சந்திக்கவில்லை' என்றுதான் முதலமைச்சர் சொல்கிறார். தன் குடும்பத்தைச் சார்ந்த யாரும் சந்திக்கவில்லையா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். அதுதான் தமிழக மக்களின் விருப்பம்." என்று கூறினார்.

மேலும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோது ஒரு நொடி மின்விளக்கு அணைந்து எரிந்தபோது, ``என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் போய்டுது. மின்சாரத்துறை அமைச்சருக்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போலிருக்கு." என்று சிரித்துக்கொண்டே பேசி அங்கிருந்து நகர்ந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Health: டான்சில் வீக்கம் முதல் கன்ன எலும்புகளில் வலி வரை... சீசனல் பிரச்னைகளை விரட்ட டிப்ஸ்!

மூக்கடைப்பா..? மூக்கடைப்பா..?அதிகாலைப் பனியால் சிலருக்கு மூச்சுத் திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்து... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ எடை குறையலாம், தினமும் எடையை செக் பண்ணலாமா?

Doctor Vikatan: ஒரு மாதத்தில் இத்தனைகிலோதான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா... சிலர் ஒரே மாதத்தில் 10- 12 கிலோவெல்லாம்குறைத்ததாகச்சொல்கிறார்களே... அது சரியானதா... தினமும் உடல் எடையை ச... மேலும் பார்க்க

Beetroot: பீட்ரூட் சமைக்காமல் சாப்பிட்டால் அதிக சத்துகள் கிடைக்குமா? ABC ஜூஸ் தினமும் அருந்தலாமா?

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய ஆரோக்கியப்பலன்கள் இருப்பதால் பெரியவர்களுக்கும் பீட்ரூட் பிடிக்கிறது. பீட்ரூட் சாப்பிடு... மேலும் பார்க்க

Smoking: ஒரு சிகரெட் உங்கள் வாழ்நாளில் 20 நிமிடங்களை குறைக்கிறது - புதிய ஆய்வில் பகீர் தகவல்!

புகைப்பிடிப்பது உலகம் முழுவதும் பரவி காணப்படும் தீய பழக்கமாகும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வொன்றில் 20 சிகரெட்டுகள் ஒரு நபரின் வாழ்நாளில் 7 மணிநேரத்தைக் குறைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள... மேலும் பார்க்க

ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?

அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதி... மேலும் பார்க்க