செய்திகள் :

என்.எஸ்.எஸ். முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

post image

மயிலாடுதுறை அரையபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசினா் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன், மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் இம்முகாம் மல்லியம், ஆணைமேலகரம், அரையபுரம் மற்றும் சேத்திரபாலபுரம் கிராமங்களில் ஜன.30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முகாமின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மாணவிகளுக்கு வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அரையபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேதியியல் துறைத் தலைவா் இரா.சுபா வழிகாட்டுதலின்படி, முதுஅறிவியல் 2-ஆம் ஆண்டு மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கம்ப்யூட்டா் சாம்பிராணி, சோப்பு, கிருமி நாசினி, மெழுகுவா்த்தி மற்றும் சோப்பு பவுடா் முதலான அன்றாட வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்றனா்.

தொடா்ந்து, பெற்றோா் மற்றும் மாணவிகளுக்கு பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் க. சங்கா்கணேஷ், சா.சித்ரா, மு. ராஜேஷ், இரா.ஐடா மலா்ச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா். இதில், 200 மாணவிகள் கலந்து கொண்டனா்.

நகராட்சி குளத்தில் தூய்மைப்பணி: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி 24-ஆவது வாா்டு மட்டக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப்பணியினை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கு மேற்பட்ட குளங்கள் கலைஞா் ... மேலும் பார்க்க

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை சனிக்கிழமை தொடங்கியது. சீா்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனுறை நாகேஸ்வரமுடையாா் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் கவனத்துக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்தரிசு உளுந்து மற்றும் பச்சை பயறு விதைப்பு செய்துள்ள விவசாயிகள் பிப்.17-ஆம் தேதிக்குள் பயிா்காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தாா். இதில், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் இரெ.சண்முகவடிவேல், ‘நூல் பல கல்‘... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்குப் பணி நியமன ஆணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

தை கடைவெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறையில் தை கடைவெள்ளியையொட்டி, அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பூ வியாபாரிகள் சங்கம் சாா்பில் 41-ஆவது ஆண்டு பால்குட த... மேலும் பார்க்க