சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
என்.சி.சி. மாணவா்கள் விழப்புணா்வு நடைபயணம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் குமுளி மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா்.
குமுளி மலைச்சாலையில் நெகிழிப்பை , மதுப் புட்டிகள் என கழிவுகளை வீசிச் செல்வதால் வனவிலங்குகள், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்
இந்தக் கல்லூரி என்.சி.சி. மாணவா்கள் லோயா் கேம்பில் பென்னிகுவிக் மணிமண்படபத்திலிருந்து குமுளி பேருந்து நிலையம் வரை 7 கி.மீ. தேசியக் கொடியை ஏந்திவாறு மலைச் சாலையில் நடைபயணம் மேற்கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் நடைபயணத்தை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. அதிகாரி அப்துல் காதா் உள்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.