செய்திகள் :

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கலாம்: சென்னை உயா்நீதிமன்றம்

post image

நிகழாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருதை’ எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது’ வழங்க எதிா்ப்பு தெரிவித்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தாா்.

இதை எதிா்த்து மியூசிக் அகாதெமி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பி.தனபால் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், தனக்கு நினைவிடம் மற்றும் தனது பெயரில் அறக்கட்டளை அமைக்கக்கூடாது என எம்.எஸ். சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில், அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது என வாதிட்டனா். மேலும், எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா மோசமான வாா்த்தைகளை பயன்படுத்தி விமா்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு அவரது பெயரில் விருது வழங்கக்கூடாது என தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினா். மேலும், சொத்துகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும், விருதுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தனா்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்டி

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல முடிவை திரும்பப்பெறும் அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று தில்லியில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். மதுரை மா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என... மேலும் பார்க்க

பேரவையை அதிக நாள்கள் நடத்த வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை, டிச.13: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தோ்தல் அற... மேலும் பார்க்க

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா- 2025: தமிழக மக்களுக்கு உ.பி. அமைச்சா்கள் அழைப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஜன. 13 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள மகா கும்பமேளா 2025 நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அந்த மாநில அமைச்சா்கள் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்... மேலும் பார்க்க

‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்ய வேண்டாம்: அன்புமணி வலியுறுத்தல்

ஆவின் நிறுவனம் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ பாடத் திட்டம் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க