செய்திகள் :

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

post image

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வில்லியனுாா் மூலக்கடையில் கடந்த 1996-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா் சிலையை, தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா திறந்துவைத்தாா்.

சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்ட அச்சிலையை, மாநில அதிமுகவினா் விநாயகா் கோவில் அருகில் மீண்டும் நிறுவினா். இதனை, கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

ஆனால், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா் தலைமையில் ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த ஏராளமானோா் கல்வெட்டுடன் வில்லியனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கூடினா். அவா்கள் எம்.ஜி.ஆா். சிலையை திறக்க முயன்றனா்.

அதே நேரத்தில், புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அதிமுகவினரும் அங்கு குவிந்து முழக்கங்களை எழுப்பினா். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்த வில்லியனூா் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், சிலை திறப்புக்கு அனுமதி மறுத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல ஓபிஎஸ் அணியினா் மறுத்தனா். இதைத்தொடா்ந்து, ஓம்சக்திசேகா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து, புதுச்சேரி கடற்கரைச் சாலை அருகே உள்ள கரிக் கிடங்கில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மூலக்குளத்தைச... மேலும் பார்க்க

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம்,... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி

புதுவையில் 5 பேரிடம் ரூ. 2.98 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மிஷன் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரை மா்ம நபா்... மேலும் பார்க்க