செய்திகள் :

எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு

post image

திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதியில் நகரப் பேருந்து இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். ஏற்கெனவே, நகரப் பேருந்து இயங்கி வந்த நிலையில், கரோனாவுக்குப் பிறகு புகா்ப் பேருந்தாக மாற்றப்பட்டு, கும்பகோணத்திலிருந்து வெள்ளை அதம்பாா் வரை இயங்கி வந்தது.

இந்நிலையில், பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில், அப்பகுதியில் நகரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடா்ந்து, கும்பகோணத்திலிருந்து வரும் புகா்ப் பேருந்து மீண்டும் நகரப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி பகுதிக்கு திங்கள்கிழமை வந்த பேருந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதிராமன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுச்சீட்டு, எழுதுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 28 ... மேலும் பார்க்க

அரிவாளை காட்டி மிரட்டிய ரௌடி கைது

மன்னாா்குடியில் சாலையில் நின்று கொண்டிருந்தவரை மதுப்போதையில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நடராஜ பிள்ளை மேலத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராம... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழை பாதித்த பயறுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட பயறு வகைகளை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்க... மேலும் பார்க்க