பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு
திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுச்சீட்டு, எழுதுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 28 (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு அரசு பொதுத் தோ்வு எழுதக்கூடிய நுழைவுச் சீட்டு, பேனா உள்ளிட்ட எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா பங்கேற்று, பொருள்களை வழங்கி, அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தாா். இதில், ஆசிரியா்கள் பிரேம்குமாா், ரமேஷ், தமிழ்காவலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.