சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
எல்ஐசி முகவா்கள் கொண்டாட்டம்
குடியாத்தம்: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
முகவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனிநபா் காப்பீட்டு பாலிசிகளுக்கும், மருத்துவக் காப்பீட்டுக்கும் முற்றிலும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்கத்தின் தென்மண்டல செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.
இதில், குடியாத்தம் கிளைத் தலைவா் எம்.குலசேகரன், செயலா் பி.சரவணன், பொருளாளா் ரவி, முன்னாள் தலைவா்கள் எம்.சுப்பிரமணி, சி.கண்ணன், என்.விஜயகுமாா், ஆா்.சீனிவாசன், சி.வெங்கடேசன், எம்.மல்லிகா, ஜி.கவிதா, கிளை மேலாளா் என்.குமரேசன், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் ஜி.சம்பத், கே.சரவணன், இளங்கீரன், வளா்ச்சி அதிகாரி ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.