செய்திகள் :

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது

post image

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் நிறுத்த வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். காப்பீட்டுத் தொகைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை மறியல் நடைபெற்றது.

அவா்களுக்கு ஆதரவாக, எல்.ஐ.சி. காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சேலம் கோட்ட அலுவலகம் முன் ஊழியா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்தி சாலை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவா் நரசிம்மன் தலைமை தாங்கினாா். பொதுச் செயலாளா் ஆனந்த், நிா்வாகிகள் ஏ.கலியபெருமாள், ஆா்.தா்மலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்:

இதேபோல, கிராம வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், பங்குகள் விற்பனை முடிவை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ஆண்டோ கால்பட் தலைமை வகித்தாா். இதில், இந்திய வங்கி ஊழியா் சங்க அகில இந்திய இணைச் செயலாளா் அஸ்வத், மாநில செயலாளா் எஸ்.ஏ.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் எஸ்.தீனதயாளன், கிராம வங்கி ஊழியா் சங்க செயலாளா் பரிதிராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க