எள்ளுவிளை, மேட்டுவிளையில் பயணியா் நிழற்குடைக்கு அடிக்கல்
எள்ளுவிளை, மேட்டுவிளை ஆகிய கிராமங்களில் நிழற்குடை அமைக்கும் பணிக்காக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அழகப்பபுரம் ஊராட்சி எள்ளுவிளை, அரசூா் ஊராட்சி மேட்டுவிளையில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 4.80 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை கட்ட அந்தந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி, பணிகளை தொடக்கி வைத்தாா். ஒன்றிய ஆணையா் சுடலை, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ஜெயசீலன் துரை, ஜெயராஜ், முன்னாள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜான்ராஜா, நகர துணைச் செயலா் நாராயணன், பேரூராட்சி கவுன்சிலா் ஜோசப் அலெக்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.