செய்திகள் :

"எவ்வளவோ தொந்தரவுகள் செய்திருக்கிறேன்; ஆனாலும்..." - திருமண நாளில் மனைவிக்கு BMW காரை பரிசளித்த SAC

post image

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பி.எம்.டபுள்யூ காரை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்த தம்பதி நேற்றைய தினம் தங்களுடைய 52-வது திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

SAC & Shoba
SAC & Shoba

இந்த 52-வது திருமண நாளைச் சிறப்பானதாக மாற்றிட தன்னுடைய மனைவிக்கு இந்த பி.எம்.டபுள்யு காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இது குறித்து எஸ்.ஏ.சி, "எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்னைகள் இருந்துள்ளன. நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன்.

தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னுடன் இத்தனை ஆண்டுக் காலம் வாழ்ந்திருக்கிறாள் மகிழ்ச்சியாக.

அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

SAC & Shoba
SAC & Shoba

திருமணமான புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம்.

ஆனால் இந்த 52 ஆண்டுக் கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன் அவளது மகிழ்ச்சிக்காக. இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

இயக்குநர் என்பதைத் தாண்டி பல திரைப்படங்களில் நடிகராகவும் களம் கண்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. சமீபத்தில் சின்னத்திரையிலும் இவர் கவனம் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Nizhal Kudai: ``என் வாழ்க்கையில் அக்கா மாதிரி நபரைப் பார்த்ததே இல்லை..'' - தேவயானி குறித்து நகுல்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவு... மேலும் பார்க்க

'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான் பேசியது என்ன?

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜித் கதாநாயகனாகவும... மேலும் பார்க்க

Gangers: "ஒரே சிரிப்பு சரவெடி; வடிவேல் சாரின் மேஜிக்..." - கேங்கர்ஸ் படக்குழுவைப் பாராட்டிய சிம்பு

சுந்தர்.சி இயக்கி நடித்திருக்கும் படம் 'கேங்கர்ஸ்'. இதில் சுந்தர்.சி உடன் வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். தவிர மைம் கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க

What to watch on Theatre: வீர தீர சூரன், Phule, கேங்கர்ஸ், Empuraan; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கேங்கர்ஸ் (தமிழ்)கேங்கர்ஸ் (தமிழ்)சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம்கோபி, அருள்தாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. அரசன் கோட்டையிலுள்ள ஒர... மேலும் பார்க்க

``கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது!'' - கேம் சேஞ்சர் பற்றி கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்த... மேலும் பார்க்க