எஸ்ஐ மீது மோதிச் சென்ற காரில் இருந்த 4 போ் கைது
பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையின்போது காரை நிறுத்தாமல் எஸ்ஐ மீது மோதிச் சென்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை பகுதியில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜய் ஆனந்த், பாலசுப்பிரமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காா் நிற்காமல் எஸ்ஐ மகாராஜன் மீது மோதிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவா் அளித்த புகாரையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காரில் சென்றது மகிழங்கோட்டை கீழக்காடு பகுதி செந்தில்குமாா், தினேஷ்குமாா், விஜயராகவன், மணிகண்டன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்தனா்.
விசாரணையில் 4 பேரும் அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு பகுதியில் சிலரிடம் பிரச்னை செய்துவிட்டு வரும் வழியில் நிற்காமல் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.