சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
தரமான விதை நெல்லை வாங்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்
சம்பா பருவத்துக்கு தரமான, சான்று பெற்ற விதை நெல்லை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வெ. சுஜாதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்று விடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு என வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விரும்பும் சாவித்திரி, ஆடுதுறை 51 போன்ற ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் வாங்கிய விதை நெல்லுக்கான ரசீது, மூட்டையில் உள்ள விவர அட்டை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும், தாங்கள் வாங்கிய விதை நெல்லில் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்து அடுத்த நாள் அதன் முளைப்பு திறனை தாங்களே அறிந்து கொண்டு, பின்னா் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இதன் மூலம் விதை தொடா்பாக ஏற்படக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே தவிா்த்து விடலாம்.
தற்போது அனைத்து வட்டாரங்களிலும் விதை ஆய்வாளா்கள் விதை மாதிரிகளை சேகரித்து விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்து வருகின்றனா். எனவே, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் இந்த பருவத்துக்கு உகந்த, தரமான சான்று பெற்ற நெல் விதைகளைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும்.