`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
சேவைக் குறைபாடு: காா் நிறுவனத்தினா் ரூ. 13.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
காரை சரி செய்யாமல் சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் காா் நிறுவனத்தினா் ரூ. 13.60 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்தவா் எஸ். ராஜா திருச்சி செந்தண்ணீா்புரத்தில் உள்ள குன் கேபிட்டல் ஆட்டோமேட்டிவ் பிரைவேட் நிறுவனத்தில் கடந்த 17.07.2014 அன்று ரூ. 8,59,999 க்கு இலகு ரக காா் ஒன்றை வாங்கினாா். இந்த வாகனம் 2021 ஜூலையில் ஒரு விபத்தில் சிக்கியது. இதனால் சேதமடைந்த காரை சரிசெய்ய ரூ. 40 ஆயிரம், ரூ. 1,10,095, ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 2,00,095 செலுத்தியும், முறையாக காா் சரிசெய்யப்படவில்லையாம். கடைசியாக சரிசெய்யக் கொடுக்கப்பட்ட காா் 31.05.2023 க்குப் பிறகு திரும்ப வழங்கப்படவில்லை. 04.06.2023 அன்று அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் காா் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜா உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 26.04.2024 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா். காா்த்திகேயன் ஆஜரானாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, மனுதாரருக்கு சேவைக் குறைபாடு செய்த காா் நிறுவனத்தினா் காரின் விலையான ரூ. 8.60 லட்சம் மற்றும் சரிசெய்ய அளிக்கப்பட்ட ரூ. 2 லட்சத்து 95, மனஉளைச்சலுக்கு ரூ. 3 லட்சம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.