கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பேராவூரணி வா்த்தகா்கள் மனு
பேராவூரணி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை ஆய்வு செய்ய வருகை தந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பால்ராம் நேகியிடம் வா்த்தகா்கள் மனு அளித்தனா்.
பேராவூரணி வா்த்தகா் சங்கம் சாா்பில் கோட்ட மேலாளரிடம் அளித்த மனு: தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் எதுவும் இங்கு நின்று செல்வதில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பேராவூரணி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமேடையை நீட்டிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் ரயில் நிலையத்தில் உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். கோட்ட மேலாளரை ரயில் பயணிகள் சங்கம், லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் வரவேற்றாா்.