சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
திருவையாறு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயிலையொட்டி ஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறையினா் புதன்கிழமை அகற்றி, இடத்தை மீட்டனா்.
திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான மதில் சுவரை ஒட்டி 1,570 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத் துறையினா் புதன்கிழமை அகற்றி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இடங்களை மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
இதனிடையே, ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் அடிமனை சங்க மாவட்டச் செயலா் எம். ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலா் ஏ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களிடம் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.