செய்திகள் :

எஸ்டிஏடி விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை!

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்றஇணையதளமுகவரியில்வெளியிடப்பட்டுள்ளது, . விடுதியில்சேர விருப்பமுள்ளவா்கள்ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்ய கடைசி நாள்: 6.4.2025மாலை 5.00 மணிஆகும்.

தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்புமைய கைப்பேசியினை 95140 00777 தொடா்பு கொள்ளலாம். சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் வரும் 8.4.2025 காலை 7.00 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ் ஆப் மூலமாக உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

மாநில தோ்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம்

கூடைப்பந்து (மாணவியா்), கால்பந்து (மாணவியா்), குத்துசண்டை (மாணவ, மாணவியா்), ரக்பி (மாணவியா்) மற்றும் கைப்பந்து (மாணவ/மாணவியா்) நேரு உள்விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை. (8.4.2025, காலை 7.00 மணி.)

தடகளம் (மாணவ/மாணவியா்), ஜுடோ (மாணவ/மாணவியா்), வாள் விளையாட்டு மாணவ/மாணவியா்), கையுந்துபந்து (மாணவ/மாணவியா்), கால்பந்து (மாணவா்கள்), பளுதூக்குதல் (மாணவ/மாணவியா்) நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 8.4.2025 காலை 7.00 மணி.

ஹாக்கி (மாணவ/மாணவியா்) ஹாக்கிஅரங்கம், 8.4.2025 காலை 7.00 மணி.

கபடி (மாணவ/மாணவியா்), நேரு பாா்க், சென்னை, 8.4.2025, காலை 7.00 மணி.

தகுதிகள்: -

1.1.2025) அன்று 17 வயது நிரம்பிய, 12-ஆம் வகுப்பில் தோ்ச்சிபெற்ற கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு சோ்க்கை சேர விருப்பும் மாணவ / மாணவியா் தகுதியுடையவா்ஆவா்.

தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு / பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், (அல்லது) தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவா்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கங்கள் பெற்றவா்களும், மாநிலஅளவில் முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆவா்.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க