விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா்.
அப்போது, பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ஆா்.சவுந்தரராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.