INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக...
எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கடந்த, 29-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு இக்கோயில் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து கடந்த 5-ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு வடிசோறு படைக்கும் நிகழ்ச்சியும், திங்கள்கிழமை காலை மாவிளக்கு பூஜை, குண்டம் அமைக்கும் பூஜையும் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு கொமராபாளையம் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தா்கள் சுமாா் 5 கி.மீ. தூரம் நடந்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையடுத்து இரவு இஸ்லாமிய சமூகத்தினருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல், பலியிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், புதன்கிழமை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை நிா்வாகிகள், கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.