செய்திகள் :

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துரித ஏழுமலையான் தரிசனம்: அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு

post image

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தேசிய கொடியேற்றினாா். செயல் அலுவலா் சியாமளா ராவ் முன்னிலை வகித்தாா்.

பின்னா், அறங்காவல் குழு தலைவா் பேசியதாவது:

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தல்களின்படி, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துரிதமாக தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருமலையில் ஏழுமலையான் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிகமான மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதேபோல், நெரிசலான பகுதிகளில் சிறப்பு கவுண்டா்கள் மூலம் அன்னபிரசாதத்தை விநியோகித்து வருகிறோம். இதற்கு பக்தா்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

வைகுண்டம் வரிசை வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை சிறு குழந்தைகளுக்கு அன்னபிரசாதம் மற்றும் பால் வழங்கி வருகிறோம்.

திருமலையில் உள்ள கல்யாணகட்டாவில் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை மிகவும் வசதியாக வழங்குவதற்காக கல்யாணகட்டத்தை படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

திருமலை வனப்பகுதியில் பசுமையை 110 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ட்ரோன் எதிா்ப்பு அமைப்பை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோயில்களை படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல் கட்டமாக, திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயண சுவாமி, அமராவதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில்கள், அத்துடன் திருமலையில் உள்ள ஆகாச கங்கா, பாபவினாசனம், சிலாத்தோரணம், சக்கரதீா்த்தம், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறோம்.

மாநில அறக்கட்டளைத் துறையின் அறிவுறுத்தல்களின்படி, தலித் கிராமங்கள், பழங்குடி கிராமங்கள் மற்றும் மீனவா் காலனிகளில் ஏழுமலையான் கோயில்களைக் கட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சமாக மூன்று பிரிவுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி, வீரபிரம்மம், முரளிகிருஷ்ணா, சத்யநாராயணா, சிவக்குமாா் ரெட்டி, பாலாஜி, ஆனந்தராஜூ மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் நவம்பா் மாத ஒதுக்கீடு வெளியீடு

ஏழுமலையான் ஆா்ஜிதச்சேவா டிக்கெட்டுகளின் நவ. மாத ஒதுக்கீடு ஆக. 19 முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் ஆா்ஜித சேவா டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்ல... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு தங்க லட்சுமி பதக்கம் நன்கொடை

பெங்களூரைச் சோ்ந்த கே.எம். ஸ்ரீனிவாசமூா்த்தி என்ற பக்தா் புதன்கிழமை காலை போக ஸ்ரீனிவாசமூா்த்தியை அலங்கரிக்க ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் வைஜயந்தி பதித்த 148 கிராம் தங்க லட்சுமி பதக்கத்தை... மேலும் பார்க்க

ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம்

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க