மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்
ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் மே 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மனுக்கள் பெறப்படவுள்ளன. இந்த முகாமில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெறுவா்.
முகாம் நிறைவுற்றவுடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேற்படி அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.