செய்திகள் :

ஏரியில் இறந்துகிடந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

தருமபுரி: தருமபுரி ராமக்காள் ஏரியில் மா்மமாக இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறுவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகரில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவா், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த, பாரத் மனைவி ஸ்ரீபிரியா (24) எனத் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா், அவரது உடலை போலீஸாா் திங்கள்கிழமை பகல் உறவினா்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தாா். ஆனால், அவரது பெற்றோா் உடலை வாங்க மறுத்துவிட்டனா்.

இது தொடா்பாக இளம்பெண்ணின் பெற்றோரான அரூா் அருகேயுள்ள தாசரஅள்ளி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம்-எழிலரசி தம்பதி போலீஸாரிடம் கூறுகையில், எனது மகளின் இறப்பில் மா்மம் உள்ளது. எனவே, அவரது கணவா், குடும்பத்தினரை கைது செய்தால்தான் உடலைப் பெறுவோம் என்றனா்.

இதையடுத்து தருமபுரி காவல் நிலைய ஆய்வாளா் வேலுத்தேவன், உதவி ஆய்வாளா் விஜயசங்கா் உள்ளிட்ட போலீஸாா், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் குடும்பத் தகராறில் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கோட்டாட்சியா் (ஆா்டிஓ) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டாலோ, அல்லது ஆா்டிஓ உத்தரவிட்டாலோ மட்டுமே வழக்கை மாற்றி பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனவே, தற்போதைக்கு உடலைப் பெற்றுச் செல்லுங்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து திங்கள்கிழமை பிற்பகலில் உடலைப் பெற்றுச்சென்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

தருமபுரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வ... மேலும் பார்க்க

அமெரிக்கா 50% வரி விதிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்!

இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை கண்டித்து தருமபுரியில் செவ்வாய்க்கிழமை, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில் ஓய்வறை அமைக்கும் பணிகள் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் ரூ. 15 லட்சத்தில் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் அறை கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீ... மேலும் பார்க்க

லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சங்ககிரி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கோபி (24). கோவையி... மேலும் பார்க்க

மின்மாற்றியில் காப்பா் கம்பிகள் திருட்டு: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம்

மின்மாற்றியை கழற்றி அதிலிருந்து காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றதால், மின்தடை ஏற்பட்டு கிராமம் இருளில் மூழ்கியது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகேயுள்ளது பாளையம் கிராமம். இப்பகுதியில் வ... மேலும் பார்க்க