மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியபகண்டை கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி 3 -ஆம் வகுப்பு படித்துவந்த சிறுவன் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பெரியபகண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் . இவரது மகன் பிரதீஷ் (7). இவா் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.
சிறுவன், புதன்கிழமை மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நண்பா்களுடன் சென்றாராம். அங்கு கால் கழுவுவதற்காக ஏந்தல் ஏரியில் இறங்கியுள்ளாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக, சிறுவன் ஏரி நீரில் விழுந்து விட்டாா்.
நீரில் சிறுவன் தத்தளித்ததைப் பாா்த்த சக நண்பா்கள்கூக்குரல் எழுப்பியதால். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவா்கள் விரைந்து வந்து தண்ணீருக்குள் மூழ்கிய சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால் சிறுவன் இறந்துவிட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சிறுவன் உயிரிழப்பு அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.