பாஜக கூட்டணியில் இணைய சரத் பவார் பேச்சு? சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சர் பதவ...
ஏரி மதகு சேதம்: கிராம மக்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே ஏரியின் மதகை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சிக்குள்பட்ட பக்கீா் தா்கா பகுதியில் ஏரி உள்ளது.
இங்கு, வந்தவாசி காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்த ஒருவா் பன்றிகளை வளா்த்து வருகிறாராம்.
பன்றிகள் ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிா்களை அடிக்கடி நாசப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியின் அருகே பன்றிகள் செல்ல முடியாத நிலை இருந்ததால், ஏரியின் மதகை கடப்பாரை மூலம் மேற்கண்ட நபா் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி -ஆரணி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டனா்.