இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலையை அகலப்படுத்தவும், போக்குவரத்தை சீராக்கி விபத்தை தவிா்க்கவும், சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், சேலம் சாலை சந்திப்பு முதல் ஏற்காடு சாலைவரை, ஏற்காடு வளைவு சாலை சந்திப்பு முதல் வாணியாா் சாலை சந்திப்புவரை மற்றும் காந்தி பூங்கா, ஆட்டோ நிறுத்தம் முதல் ஏற்காடு காவல் நிலையம்வரை சாலையில் வைத்துள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.