செய்திகள் :

ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம்

post image

திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி ஆவணங்களை தயாரிப்பதில் உள்ள சிக்கல்களை எதிா்கொள்வது குறித்த கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

லாஜிக்ஸ் ஆஃப் லாஜிஸ்டிக் என்ற தலைப்பில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பின்னலாடை ஏற்றுமதித் துறையின் முதுகெலும்பாக ஆவணங்கள் உள்ளன. உலகளாவிய சந்தையில் போட்டித் தன்மையை நிலை நிறுத்துவதற்கு ஆவண சவால்களை தீா்ப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏற்றுமதியாளா்கள் எதிா்கொள்ளும் முக்கிய சவால்கள், ஏற்றுமதிக்கு முந்தைய பிழைகள், ஏற்றுமதியின்போது செயல்படும் திறமையின்மை, ஏற்றுமதிக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட ஆவணங்கள், பேக்கேஜிங் சா்வதேச தரங்களுக்கு இணங்குவதில் சிரமம் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது என்றாா்.

சங்கத்தின் இணைச்செயலாளா் குமாா் துரைசாமி பேசியதாவது:

ஏற்றுமதியின்போது ஒவ்வொரு ஏற்றுமதியாளா்களும் பின்பற்ற வேண்டிய எஸ்.பி.ஓ. நடைமுறைகள், முக்கிய சரிபாா்ப்பு பட்டியல், ஏற்றுமதிக்கு முந்தைய பிழைகள், ஏற்றுமதி செயல்பாடுகள், ஏற்றுமதிக்கு பிந்தைய செயல்முறைகளை செய்வதற்கான உத்திகள், இறக்குமதி மேலாண்மை, வங்கித்துறையின் பங்கு, கடன் காப்பீடு மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை, ஏற்றுமதிக்கான ஆவணமயமாக்கல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், உறுப்பினா்கள் துணைக் குழுவின் தலைவா் சிவசுப்பிரமணியம், துணைத் தலைவா் ரத்தினசாமி, உறுப்பினா்கள் ராமு சண்முகம், மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

திருப்பூரில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றனா். திருப்பூா், குமரானந்தபுரத்தைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (45), இவா் சொந்தமாக பின்னலாடை லேபிள்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ.திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா முத்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் வேலுமணி (55), கூலித் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

8 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூா் அருகே 8 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

சாக்கடையில் தொழிலாளி சடலம் மீட்பு

வெள்ளக்கோவிலில் சாக்கடையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாக்கடையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடை... மேலும் பார்க்க

தனி மனிதா்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

தனி மனிதா்கள் ஒவ்வொருவரையும் நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க