BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 83,858 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26, 034 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.