கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி
திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வராக சுவாமி ஏழுமலையான் இங்கு இருக்க அனுமதி அளித்த சாசனம் இன்றளவும் திருமலையில் உள்ளது. அதனால் திருமலையில் முதல் பூஜை, முதல் ஆரத்தி, முதல் நெய்வேத்தியம் இன்றும் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பின்பே ஏழுமலையானுக்கு அளிக்கப்படுவது வழக்கம்.
மேலும் பக்தா்களும் முதலில் வராக சுவாமிமயை ரிசித்த பின்பே ஏழுமலையானை தரிசிக்க செல்வது வழக்கம்.
திருமலையில் இத்தகைய முக்கியத்துவம் பெற்ற வராக சுஸ்வாமியின் ஜெயந்தி உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி திங்கட்கிழமை வராக ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, கலசப் பிரதிஷ்டை, கலச பூஜை மற்றும் புண்யாஹவசனமும் செய்யப்பட்டன. இதன் பின்னா், வேத மந்திரங்களின் இடையில் வராகருக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் சமா்பித்து ஆரத்தி அளித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது.
கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி லோகநாதம், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.