செய்திகள் :

ஏ. ஆர். ரஹ்மான் வந்தாலும்... இளையராஜாவைப் புகழ்ந்த ரஜினி!

post image

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இளையராஜா பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்கு தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்கக் கூடாது. அவ்வபோது, தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரஹ்மான்) வந்தார். அவர் வந்தபின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நான் உள்பட பலர் அந்த புதிய இசையமைப்பாளரிடம் சென்றோம்.

ஆனால், என்ன நடந்தாலும் தி. நகரிலிருந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் எப்போதும்போல் சென்றுகொண்டிருந்தது. பாஸ்கர் (இளையராஜாவின் சகோதரர்) மறைந்தார். ராஜாவின் மனைவி ஜீவா மறைந்தார்; உயிராக நினைத்த மகள் பவதாரணி மறைந்தார். ஆனால், எதுவும் ராஜாவை பாதிக்கவில்லை. எந்த சலனமும் இல்லாமல் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

82 வயதிலும் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்கிறார். இளையராஜாவின் உலகமே வேறு. அதனால்தான், அவரை இன்கிரிடேபிள் இளையராஜா (incredible ilaiyaraaja) என்கிறோம். இளையராஜாவுக்கு இருக்கும் திமிரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு மிகவும் தகுதியான ஆள் அவர்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

actor rajinikanth spokes about ilaiyaraaja

மதராஸி வசூல் எவ்வளவு?

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளி... மேலும் பார்க்க

அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெ... மேலும் பார்க்க

இட்லி கடை தனுஷ் போஸ்டர்!

நடிகர் தனுஷின் இட்லி கடை அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்குப் பின் இயக்கி நடித்த இட்லி கடை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன்... மேலும் பார்க்க

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் டிரா: நடப்பு சாம்பியன் ஜப்பானை வெளியேற்றியது இந்தியா!

மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய மகளிரணி 1-1 என டிரா செய்தது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹாக்கி ஆ... மேலும் பார்க்க