ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 6-வது மற்றும் 10-வது இடங்களுக்கு முறையே முன்னேறியுள்ளனர்.
இந்த தரவரிசைப் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அக்ஷர் படேல் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கை பொருத்தவரையில், அபிஷேக் சர்மா 829 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா இரண்டாவது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சறுக்கி 11-வது இடத்தில் உள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஒரு இடம் முன்னேறி 26-வது மற்றும் 34-வது இடங்களில் முறையே உள்ளனர். ஆல்ரவுண்டர்களில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் தொடர்கிறார்.
The ICC today released the rankings for the best players in international T20 matches.
இதையும் படிக்க: 16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!