கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்
ஐபிஎல் 2025-இன் சிறந்த கேட்ச்..! கமிந்து மெண்டிஸுக்கு குவியும் வாழ்த்துகள்!
சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவ்ஸ் அடித்த பந்தினை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச் விடியோ வைரலாகி வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் தோற்றது. சொந்த மண்ணில் இது சென்னைக்கு 4-ஆவது தோல்வியாகும்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகிய டெவால்டு ப்ரீவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்.
ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் டெவால்டு ப்ரீவிஸ் அடித்த பந்து லாங்க்-ஆப் ஃபீல்டிங்கில் நின்றிருந்த கமிந்து மெண்டிஸ் தனது இடது பக்கம் சென்ற பந்தினைத் தாவிப் பிடித்தார்.
இந்த கேட்ச் ஆட்டத்தையே மாற்றியது. டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே அணி ரன்களே அடிக்காமல் 154க்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது.
கமிந்து மெண்டிஸின் இந்த கேட்ச் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஐபிஎல்-இன் சிறந்த கேட்ச் இதுதான் எனவும் வர்ணனையாளர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் புகழ்ந்து வருகிறார்கள்.
Only a catch like that could’ve stopped that cameo from Brevis!
— IndianPremierLeague (@IPL) April 25, 2025
Kamindu Mendis, take a bow #CSK 119/6 after 14 overs.
Updates ▶ https://t.co/26D3UalRQi#TATAIPL | #CSKvSRH | @SunRiserspic.twitter.com/NvthsQfpUj