தங்கக் கோயிலுக்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாகக் குறைந்தது: அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது.
கா்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் இயக்கத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 16,000 கனஅடியாகக் குறைந்ததால் கடந்த 20 நாள்களாக அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை நீக்கி உத்தரவிட்டாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.