சுதர்சன ஹோமம் யாரெல்லாம் எதற்கெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா? சங்கல்பித்தால் சங...
ஒசூர் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
ஒசூரில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை சென்னையிலிருந்து முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க ஒசூர் வந்தடைந்தார் முதல்வர் மு. க . ஸ்டாலின். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று செப்.11-ஓசூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து அசன்ட் சர்க்யூட் தொழிற்சாலையில் அடிக்கல் நாட்டுகிறார். குருபரப்பள்ளியில் டெல்டா நிறுவனத்தில் இரண்டாவது அலகை தொடங்கி வைக்கிறார் அவர் மீண்டும் ஒசூரிலிருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் மருகன் சபரீசன் தந்தை இன்று காலமான நிலையில், தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.