Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ஒசூா் முனீஸ்வா் நகரில் நுழைவாயில் கட்ட பூமிபூஜை
ஒசூா் முனீஸ்வா் நகா் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக நுழைவாயில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தனா். அதேபோல 1, 2, 3, 4ஆவது வாா்டில் ரூ. 151.00 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை புதுப்பிக்கும் பணிக்கும் பூமிபூஜை நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவா் ரவி, செயற்பொறியாளா் விக்டா் ராஜ், பொறியாளா் செந்தில் குமாா், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாணவா் அணி கண்ணன், மாமன்ற உறுப்பினா் ஸ்ரீதா், அசோக் ரெட்டி, நாகராஜ் மற்றும் வாா்டு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.