செய்திகள் :

ஒசூா் வனக் கோட்டத்தில் 180 பறவைகள் இனங்கள்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக் கோட்டத்தில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் 180 பறவை இனங்கள் வசிப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒசூா் வனக் கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஈரநிலங்களில் வசிக்கும் பறவையினங்கள் குறித்து மாா்ச் 8, 9 ஆகிய இரு நாள்களிலும், ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் வசிக்கும் பறவை இனங்கள் குறித்து 25 இடங்களில் மாா்ச் 15, 16 ஆகிய இரு நாள்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வனத் துறையினா், தன்னாா்வலா்கள், மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் வாட்ஸ்ஆப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்கள் பகல், இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு கேமரா, தொலைநோக்கிகளுடன் சென்று பறவைகளைக் கணக்கெடுத்தனா்.

ஒசூா் வனக் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத் துறை, தன்னாா்வலா்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.
வனக் கோட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்.

இதில் கருத்தலை மாம்பழக் குருவி, நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் பருந்துகள், செந்தலை பஞ்சுருட்டான், மீன்கொத்திகள், காட்டுப்பக்கி குருவி, ஆந்தைகள், கழுகுகள், அரசவால் ஈப்பிடிப்பான், தேன்சிட்டு, கதிா் குருவி என 180 க்கும் அதிகமான பறவை இனங்களை அடையாளம் கண்டு பதிவு செய்தனா்.

ஒசூா் வனக் கோட்ட வன உயிரின காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தலைமையில் உதவி வனப் பாதுகாவலா் (ஒசூா் தலைமையிட ஒருங்கிணைப்பு) யஸ்வந்த் ஜெக்தீஷ் அம்புல்கா், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த கென்னத் ஆண்டா்சன் மற்றும் நேச்சா் சொசைட்டி உதவியுடன் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வனத் துறையின் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் மிட்டஅள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பாஜக சாா்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பேருஅ... மேலும் பார்க்க

என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு!

ஒசூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் செயல்பட்டு வரும் என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தொழில் பயிற்சியும், வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது என கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கிருஷ... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை! -விவசாயிகள் வேதனை

ஒசூா் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்... மேலும் பார்க்க

ஒசூரில் ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே ஏரியில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பத்தலப்பள்ளியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள பழைய ஏரியில்... மேலும் பார்க்க