4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால், தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி நீலகிருஷ்ணன் (41). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரித்து சென்று விட்டாா்.
இதனால், மனமுடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.