மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maan...
ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு அஞ்சலி
கரூா்: கரூரில், சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு பட்டியலின விடுதலை பேரவை சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு பட்டியலின் விடுதலை பேரவையின் நிறுவனத் தலைவா் தலித்ஆனந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் பேரவையின் மாநில பொருளாளா் வழக்குரைஞா் தனபாலன், மாவட்ட மகளிரணிச் செயலாளா் சாவித்திரி, தாந்தோணி ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.